மரணதண்டனை விதிக்க மைத்திரி எடுத்த தீர்மானம்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

by

போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு எதிராக மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த தீர்மானத்திற்கு எதிரான இடைக்கால உத்தரவை உச்ச நீதிமன்றம் நீடித்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் ஒக்டோபர் 15ம் திகதி வரை இடைக்கால உத்தரவை உச்ச நீதிமன்றம் நீடித்துள்ளது.

உச்சநீதிமன்ற நீதிபதிகளான முர்டு பெர்னாண்டோ, எஸ்.துரைராஜா மற்றும் யசந்த கோடகொட ஆகியோர் இந்த உத்தரவை பிறப்பித்தனர்.

போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கும் உத்தரவில் கையெழுத்திடுவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த ஆண்டு அறிவித்திருந்தார்.

எனினும், ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிராக 12 மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இதனையடுத்து, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானத்திற்கு இடைக்கால தடைவிதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த மனுக்கள் மீளவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், இந்த மனுக்கள் ஒக்டோபர் 15ம் திகதி மீண்டும் பரிசீலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.