ஜூன் 1-ம் தேதி முதல் தமிழகத்துக்குள் சிறப்பு ரயில்கள் இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல்
டெல்லி: தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று 4 ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளதாக தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது. ஜூன் 1ம் தேதி முதல் தமிழகத்தில் ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
கோவை - மயிலாடுதுறை - கோவை (செவ்வாய் கிழமை தவிர்த்து ) ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ்
மதுரை - விழுப்புரம் - மதுரை (7 நாட்களும் ) இன்டெர்சிட்டி சூப்பர்பாஸ்ட்
திருச்சி - நாகர்கோயில் -திருச்சி (7 நாட்களும் ) சூப்பர்பாஸ்ட்
கோவை -காட்பாடி -கோவை (7 நாட்களும் ) இன்டெர்சிட்டி