
புது தில்லி அருகே நிலநடுக்கம்
by DINபுது தில்லி அருகே வெள்ளிக்கிழமை இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் அளவு ரிக்டரில் 4.6 ஆக இருந்தது.
ஹரியாணாவிலும் தில்லியிலும் சுற்றியுள்ள பகுதிகளிலும் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் இருந்தது.
நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் ஏராளமானேர் தங்கள் வீடுகளிலிருந்து வெளியே ஓடிவந்துவிட்டனர்.
ஹரியாணாவிலுள்ள ரோஹ்தக்கை நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக நாட்டின் நிலநடுக்க தேசிய மையம் தெரிவித்துள்ளது.
இந்திய நேரப்படி இரவு 9.08 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.