
இலங்கையில் மேலும் 8 பேருக்கு கொரோனா
இலங்கையில் மேலும் 8 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1548 ஆக அதிகரித்துள்ளது.
குறித்த 8 பேரும் வெளிநாட்டில் இருந்து வருகை தந்தவர்கள் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.