http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2605_2020__47649562358857.jpg

மகாராஷ்டிராவில் மேலும் 2,682 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி

மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62 ஆயிரத்தை கடந்தது. மகாராஷ்டிராவில் மேலும் 2,682 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62,228-ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் கொரோனவால் 116 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 2098-ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று மட்டும் கொரோனாவில் இருந்து 8,381 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.