தாராவியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1715 ஆக உயர்வு – மின்முரசு
மும்பை தாராவி குடிசைப்பகுதியில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1,715 ஆக அதிகரித்துள்ளது.
மும்பை:
இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்போதைய நிலவரப்படி மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 62 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
உலகின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தாராவியில் இதுவரை ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், மும்பை தாராவி குடிசைப்பகுதியில் மேலும் 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1,715 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது என அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
Related Tags :
Source: Maalaimalar
murugan
Post navigation
விசாரணைக்கு அழைத்துச் சென்ற கருப்பின இளைஞர் மரணம் – அமெரிக்கா காவல் துறைகாரர் கைதுஅம்மாவுக்கு எழுதிய கடிதங்கள் – பிரதமர் மோடியின் புத்தகம் அடுத்த மாதம் வெளியீடு
Related Posts

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறல் – இந்தியா பதிலடி
murugan May 31, 2020 0 comment

கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்த பின்னரே கிரிக்கெட்டில் இயல்பு நிலை திரும்பும் – சவுரவ் கங்குலி
Ilayaraja May 31, 2020 0 comment
