வவுனியாவில் பொது சுகாதார பரிசோதகர்கள் அதிரடி நடவடிக்கை : சிக்கிய உணவகங்கள்
by Theesan, Dhayaniவவுனியா நகரப்பகுதியில் பொது சுகாதார பரிசோதகர்கள் நேற்றைய தினம் உணவகங்கள் ,மதுபானசாலைகள் மீது திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
கொவிட் -19 வைரஸ் தாக்கம் காரணமாக பல்வேறு நிபந்தனைகள் அடிப்படையில் உணவகங்கள் , வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு வவுனியா பொது சுகாதார பரிசோதகர்கள் இணக்கம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் சுகாதார வைத்திய அதிகாரி, பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொலிஸார் அடங்கிய குழுவினர் நேற்று வவுனியா நகரப்பகுதிகளில் உள்ள உணவகங்கள் , மதுபானசாலைகளுக்கு திடீர் விஜயம் மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது உணவகங்களுக்கு வருகை தருகின்ற வாடிக்கையாளர் கை சுத்தம் செய்வதில்லை , கூட்டாக இருந்து உணவருந்துவது , மருத்துவசான்றிதழ் இன்றி பணியாளர்கள் காணப்பட்டமை , காலாவதியான உணவுப்பொருட்கள் , முகக்கவசம் சீராக அணியாமை போன்ற பல்வேறு செயற்பாடுகளை அவதானித்த அக்குழுவினர் குறித்த உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையை மேற்கொண்டதுடன் சில உணவகங்களுக்கு எச்சரிக்கையும் வழங்கினார்கள்.