
கொழும்பின் சில பகுதிகளில் 18 மணிநேர நீர்வெட்டு
கொழும்பின் சில பகுதிகளில் 18 மணிநேர நீர்வெட்டு அமல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
கொழும்பு 2, 3,7, 8, 9 மற்றும் 10 ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர்வெட்டு அமல்படுத்தப்பட உள்ளதுடன் கொழும்பு 1 பகுதியில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாளை காலை 9 மணி முதல் இவ்வாறு நீர்வெட்டு அமல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.