சென்னையில் மேலும் 618 பேருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,380 ஆக அதிகரிப்பு: சுகாதாரத்துறை
சென்னை: சென்னையில் இன்று மட்டும் 618 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,380 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 71 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 8,776 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.