சென்னை புழல் மத்திய சிறையில் 30 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி
சென்னை: சென்னை புழல் மத்திய சிறையில் 30 கைதிகளுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 7 பேர் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி; 23 பேருக்கு சிறை வளாகத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா கண்டறியப்பட்டுள்ள கைதிகளுடன் தொடர்பில் இருந்த அதிகாரிகளும் தனிமைப்படுத்தப்பட்டனர்.