https://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_2548343.jpg

மருத்துவ உபகரண விலை:வெளியிட சுகாதாரத் துறை மறுப்பு

12

புதுடில்லி: 'கொரோனா' சிகிச்சைக்காக, மருத்துவ உபகரணங்கள் வாங்க செலவிடப்பட்ட தொகை குறித்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க, மத்திய சுகாதாரத்துறை மறுத்துள்ளது.

மஹாராஷ்டிர மாநிலம், மும்பையைச் சேர்ந்த, சமூக ஆர்வலர், அனில் கல்காலி என்பவர், மத்திய அரசின் இணையதளத்தில், 'ஆன்லைன்' வாயிலாக, விண்ணப்பம் ஒன்றை அளித்தார்.
அதில், கொரோனாவை கட்டுப்படுத்த, மத்திய அரசு என்னென்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளன, என்னென்ன மருத்துவ உபகரணங்கள் வாங்கப்பட்டன, அதற்கு எவ்வளவு தொகை செலவிடப்பட்டது என்ற விபரங்கள் கேட்கப்பட்டு இருந்தன.

இந்த விண்ணப்பம், மத்திய சுகாதாரத்துறையின், தகவல் அதிகாரிக்கு அனுப்பப்பட்டது. இது தொடர்பாக, 22 நாட்களுக்கு பின், அனில் கல்காலிக்கு அளிக்கப்பட்ட பதிலில், 'அனுமானத்தின் அடிப்படையில், விண்ணப்பதாரர் தகவல்களை கேட்டுள்ளார்.
'எனவே, இந்த கேள்விகளுக்கு, சட்டப்படி அவருக்கு பதில் அளிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை' என, மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்
Click here to join
Telegram Channel for FREE