https://s3.amazonaws.com/adaderanatamil/1590758020-covid19-2.jpg

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1540 ஆக அதிகரிப்பு

இலங்கையில் மேலும் 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1540 ஆக அதிகரித்துள்ளது.

குறித்த 9 பேரில் 6 பேர் இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள் எனவும் ஏனைய மூன்று பேரும் வெளிநாட்டில் இருந்து வருகை தந்தவர்கள் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.