
சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் தப்பியோட்டம்
சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் தப்பியோடி உள்ளார். நேற்று இரவு சேத்துப்பட்டை சேர்ந்த 63 வயது ஆண் தப்பியோடிய நிலையில் இன்று சென்னை பட்டாபிராம் பகுதியை சேர்ந்த 57 வயது நபர் மருத்துவமனையில் இருந்து தப்பியோடி உள்ளார்.