அனைத்து கட்சிகளுடன் நாளை ஆலோசனை
சென்னை,: தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தலைமையில், அனைத்து கட்சி கூட்டம், நாளை, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடைபெறஉள்ளது.'தமிழகத்தில், கொரோனா நோய் பரவல் அதிகரித்து வருகிறது. நோய் தொற்று கட்டுக்குள் இல்லை' என, ஸ்டாலின், நேற்று முன்தினம் குற்றம் சாட்டினார். ஆனால், 'கட்டுக்குள் உள்ளது' என, முதல்வர் இ.பி.எஸ்., நேற்று தெரிவித்தார்.
மருத்துவக் கல்லுாரிகளில், மருத்துவப் பட்ட மேற்படிப்பு இடங்களில், பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என்ற, குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இந்த பிரச்னைகள் குறித்து விவாதிக்க, தி.மு.க., தலைமையில், அனைத்துக் கட்சிக் கூட்டம், நாளை நடைபெறும் என, அக்கட்சி அறிவித்துள்ளது.அதில், இட ஒதுக்கீடு, கொரோனா தடுப்பு பணியில், அரசுகளின் செயல்பாடு குறித்து ஆலோசிக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 லட்சம் மனுக்கள்'டுவிட்டர்' பக்கத்தில், ஸ்டாலின் கூறியிருப்பதாவது:ஊரடங்கால் பாதிகக்கப்பட்ட மக்களிடம் இருந்து பெறப்பட்டு, முதல் கட்டமாக, ஒரு லட்சம் கோரிக்கை மனுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மின்னஞ்சல் வழியாக, மேலும், ஆறு லட்சம் கோரிக்கை மனுக்கள், முதல்வரின் அலுவலகத்திற்கு அனுப்பப்படும். உடனே உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
தி.மு.க.,வில் உள்ள பல்வேறு அணி நிர்வாகிகளுடன், ஸ்டாலின் நேற்று கலந்துரையாடினார். கொரோனா ஊரடங்கு காலத்தில், அந்தந்த அணிகள் சார்பில் செய்யப்பட்டு வரும், நல உதவிகள் குறித்து கேட்டறிந்து, ஆலோசனைகள் வழங்கினார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE