இறுகின்றதா இலங்கை நிலவரம்?
by டாம்போஇலங்கையில் கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை 2 ஆயிரம் தொடக்கம் 3 ஆயிரமாக உயர்ந்தால் மிகப்பெரும் ஆபத்தை நாடு சந்திக்க நேரிடும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
இலங்கை மருத்துவர் சங்கத்தின் சார்பில் பிரதி பொது செயலாளரான டாக்டர் நவீன் டி சொய்ஸா இவ்வெச்சரிக்கையினை விடுத்துள்ளார்.
குறிப்பாக குவைட் நாட்டிலிருந்து வந்த பலருக்கு தொற்று ஏற்பட்டிருக்கின்றது. இன்னும் பலர் நாடு திரும்பி வருகின்றனர். தற்போது கொரோனா கொத்துகொத்தாக நிரம்ப ஆரம்பித்திருப்பதால் இரண்டாவது நிலையை அடையுமோ என்கிற அச்சமும் ஏற்பட்டிருக்கின்றது என்றும நவீன் டி சொய்ஸா தெரிவித்துள்ளார்.
இதனிடையே யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்றைய தினம் 48 பேருக்கு கொரோனா பரிசோதனை இடம்பெற்ற நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளான இருவர் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர்.
யாழ்.போதனா வைத்தியசாலை பரிசோதனை கூடத்தில் இடம்பெற்ற பரிசோதனைகளிலேயே தொற்றுக்குள்ளான இருவர் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர்.
அதேபோன்று இன்றைய தினமான வெள்ளிக்கிழமை பரிசோதனையில் முல்லைதீவு தனிமைப்படுத்த நிலையத்தை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இன்று 39 பேருக்கான பரிசோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் மருத்துவபீட ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட நிலையில் முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் முகாமினை சேர்ந்த ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப் பட்டதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியுள்ளார்.