2021 ஆண்டு வவுனியாவில் தரம்1 இல் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பபடிவம் விநியோகம்
by Thileepan, Dhayani2021 ஆண்டு வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் தரம் 1 இல் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்ப படிவம் விநியோகிக்கப்படுவதாக பாடசாலை அதிபர் ஆ.லோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
தேசிய பாடசாலையான வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் 2021 ஆம் ஆண்டில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்ப படிவங்களை பெற இன்று பாடசாலை பாதுகாப்பு உத்தியோகத்தரிடம் நுழைவு இலக்கத்தை பெற்று விண்ணப்பத்தை பெற்றுக்கொள்வதற்கான நேர ஒதுக்கீட்டை பெறவும்.
அனுமதிக்கான விண்ணப்ப படிவங்கள் 01/06/2020 காலை 9.00 முதல் வழங்கப்படும்.
கொரோனா நோய் தொற்றுக்கால சமூக இடைவெளியை பேணும் முகமாக இந்நடைமுறையை கைக்கொள்ளுமாறு பெற்றோருக்கு அறிவுறுத்தல் விடுக்கின்றேன் என அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.