
புலம்பெயர் தொழிலாளர்களுக்காக இதுவரை 3,800 சிறப்பு ரயில்கள் இயக்கம்: வினோத்குமார் யாதவ் தகவல்
டெல்லி: புலம்பெயர் தொழிலாளர்களுக்காக இதுவரை 3,800 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு உள்ளன என ரயில்வே வாரிய தலைவர் வினோத்குமார் யாதவ் டெல்லியில் தகவல் அளித்துள்ளார். அனைத்து மாநில முதல்வர்களுடன் நேற்று ரயில்வே அமைச்சகம் சார்பில் ஆலோசனை நடத்தப்பட்டது. 449 ரயில்களை இயக்க மாநிலங்கள் கேட்டுக் கொண்டுள்ளன.