http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2605_2020__188472926616669.jpg

நாடாளுமன்ற வளாக அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிக்கு கொரோனா பாதிப்பு உறுதி; கட்டடத்தின் 2 தளங்களுக்கு சீல்

டெல்லி: டெல்லியில் நாடாளுமன்ற வளாக அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியானதை அடுத்து நாடாளுமன்ற வளாகம் அருகே உள்ள இணைப்பு கட்டடத்தின் 2 தளங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. 2ம் கட்ட ஊரடங்கு முடிந்த பிறகு மே 3-ம் தேதி முதல் ஊழியர்கள் நாடாளுமன்றத்திற்கு பணிக்கு வந்தனர். அப்போது 3 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில் இன்று 4-வது நபருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இப்போது பாதிக்கப்பட்ட ஊழியர் ராஜ்யசபை செயலாளர் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார்.

அந்த ஊழியரின் குடும்பத்தாருக்கு கொரோனா பாதிப்பு இருந்ததால், அவர்களுடன் இவரும் தொடர்பில் இருந்ததால் இவரும் தொற்றுக்கு ஆளாகியுள்ளார். அதிகாரி அந்தஸ்தில் இருக்கும் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்படுவது இது 2-வது முறையாகும். இதற்கு முன் பாராளுமன்ற மொழிமாற்றம் செய்யும் பிரிவில் பணிபுரியும் அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது ராஜ்யசபை செயலாளர் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருப்பதால், நாடாளுமன்ற இரு இணைப்பு கட்டிங்களிலும் கிருமி நாசினி தெளி்ப்புக்காக மூடப்பட்டுள்ளது. இதன்காரணமாக கிரிஷி பவன், சாஸ்திரி பவன், நிதிஆயோக் ஆகிய கட்டிடங்கள் மூடப்பட்டுள்ளது.