பிகில் படம் நஷ்டமா?.. தயாரிப்பாளர் விளக்கம் – மின்முரசு
விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் நஷ்டம் அடைந்ததாக வந்த செய்திக்கு தயாரிப்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் பிகில். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். மேலும் நயன்தாரா, டேனியல் பாலாஜி, கதிர் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
கடந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு இத்திரைப்படம் வெளியானது. விமர்சன ரீதியாக படம் சறுக்கினாலும், வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் தமிழகத்தில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையையும் படைத்திருப்பதாக சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டது.
இந்நிலையில் பிகில் ரூ.20 கோடி நஷ்டத்தை ஏற்படுத்தியதாக அந்தப் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின.
ஆனால் அவ்வாறு நான் சொல்லவில்லை என்றும், இந்தத் தகவல் தவறானது என்றும் அர்ச்சனா கல்பாத்தி வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
Related Tags :
Source: Malai Malar
murugan
Post navigation
நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கடிதம்: நாளை காலை அனைத்து மொழி செய்தித்தாள்களிலும் வெளியாகிறதுபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் – வடிவேலுவை புகழ்ந்த விவேக்
Related Posts
மன்னிப்பு கேட்ட பொன்மகள் வந்தாள் பட இயக்குனர்
murugan May 30, 2020 0 comment
விஜய், தனுஷ் படத்தை பாராட்டிய பாலிவுட் பிரபலம்
murugan May 30, 2020 0 comment