மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே தீ விபத்து.:3 மாடி துணி கடையில் கொழுந்து விட்டு எரிந்த தீ
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள துணி கடையில் தீ விபத்து ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சன்னதிவாசல் அருகே உள்ள 3 மாடிகள் கொண்ட துணி கடையில் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்களும் கோவில் பாதுகாப்பில் இருந்த போலீசாரும் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டனர்.
தீயணைப்பு வீரர்களும் கோவில் பாதுகாப்பில் இருந்த போலீசாரும் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். நேற்று இரவு மதுரையில் பலத்த மழை பெய்தது. பலத்த மழை செய்த நிலையில் திடீரென இடி தாக்கியதில் தீவிபத்து ஏற்பட்டதா அல்லது மின்கசிவு காரணமா என்று போலீசார் வழக்குப்பத்திசு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.