https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/29/original/dhoni_2011_wc.jpg
படம் - Getty Images

2011 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் நிகழ்ந்த டாஸ் குழப்பம்: காரணத்தை விளக்கிய சங்கக்காரா

by

2011 உலகக் கோப்பைப் போட்டியின் இறுதிச்சுற்றைத் தொலைக்காட்சியில் பார்த்தவர்களுக்கு இந்தச் சம்பவத்தை மறக்க முடியாது.

இலங்கை அணியை இந்திய அணி வென்று உலகக் கோப்பை வென்ற இந்த ஆட்டத்தில் டாஸ் நிகழ்வு இருமுறை நடைபெற்றது.

இந்திய வீரர் ஆர். அஸ்வினுடனான இன்ஸ்டகிராம் உரையாடலில் இலங்கை அணியின் கேப்டனாக அப்போது இருந்த சங்கக்காரா இதற்கான காரணத்தைக் கூறினார்.

2011 உலகக்கோப்பைப் போட்டியில் நடைபெற்ற இந்தக் குழப்பத்துக்குக் காரணம், அளவுக்கதிகமான ரசிகர் கூட்டம். வான்கடே மைதானத்தில் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருந்தது. இதுபோன்ற ஒரு கூட்டத்தை நான் இலங்கையில் பார்த்ததில்லை. இந்தியாவில் மட்டுமே இப்படி நடக்கும். எனக்கு அந்தக் கூட்டம் புதிது.

டாஸில் நான் தான் சொன்னேன். நான் என்ன சொன்னேன் என்று தோனிக்குத் தெரியவில்லை. நான் பூ என்று சொன்னதாக தோனி சொன்னார். ஆனால் நான் தலை தான் சொன்னேன் என்றேன். நான் டாஸை வென்றதாக ஆட்ட நடுவர் கூறினார். ஆனால் இதை தோனி ஏற்கவில்லை. இதனால் குழப்பம் ஏற்பட்டது.

இன்னொரு டாஸ் வைத்துக்கொள்ளலாம் என தோனி சொன்னார். இதனால் இன்னொரு டாஸ் நிகழ்வு நடைபெற்றது. அப்போது மீண்டும் தலை தான் விழுந்தது. டாஸ் வென்றது என் அதிர்ஷ்டமா எனத் தெரியாது. ஏனெனில் இந்திய அணி டாஸ் வென்றிருந்தால் அவர்கள் முதலில் பேட்டிங் எடுத்திருப்பார்கள் மேலும், மேத்யூஸ் மட்டும் 100 சதவீத உடற்தகுதியுடன் இருந்திருந்தால் நிச்சயம் நான் பந்துவீச்சைத் தேர்வு செய்து இரண்டாவதாக பேட்டிங் செய்திருப்போம் என்றார்.