நுவரெலியாவில் திடீரென அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம்
by Vethu, Vethuநுவரெலியா மாவட்டத்தில் இன்று நள்ளிரவு முதல் ஊரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
இன்று நள்ளிரவு 12 மணி முதல் மே 31 ஆம் திகதி நள்ளிரவு 12 மணிவரை ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும்.
இக்காலப்பகுதியில் நுவரெலியா மாவட்டத்தில் இருந்து ஏனைய மாவட்டங்களுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனினும் அத்தியாவசிய தேவைகளுக்காக மக்கள் வெளியில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மரண வீட்டிற்கு மக்கள் சுகாதார கட்டுப்பாடுகளையும் மீறி சென்று வருகின்றமை தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.