இரண்டு மாதங்களுக்குள் மூன்றாவது தடவையாக ஒரே சூலில் மூன்று குழந்தைகள்
by Ajith, Malaகடந்த இரண்டு மாதங்களுக்குள் கல்முனை வைத்தியசாலையில் மூன்றாவது முறையாக ஒரே சூலில் மூன்று குழந்தைகள் பிறந்துள்ளன.
பொத்துவிலை சேர்ந்த தாய் ஒருவரே தற்போது மூன்று குழந்தைகளை ஒரே சூலில் பிரசவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக்குழந்தைகளில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளடங்கியுள்ளன. தாயும், குழந்தைகளும் நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரமும் கல்முனை வைத்தியசாலையில் பெண் ஒரு மூன்று குழந்தைகளை பிரசவித்தார். இந்த மூன்று குழந்தைகளும் ஆண் குழந்தைகள்.
இதேவேளை கடந்த மாதம் பெண் ஒருவருக்கு மூன்று குழந்தைகள் ஒரே சூலில் பிறந்தமை குறிப்பிடத்தக்கது.