தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது: இன்று ஒரே நாளில் 874 பேர் பாதிப்பு – மின்முரசு
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 874 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 1-ந்தேதியில் இருந்து நாள்தோறும் 500-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
நேற்று 827 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று 874 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரேநாளில் அதிக தொற்று கண்டறியப்பட்டது இதுதான் முதல்முறை. இதன் மூலம் மொத்த எண்ணிக்கை 20,246 ஆக உயர்ந்துள்ளது.
இன்று 765 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை மொத்தம் 11,313 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
8,776 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இன்று 9 பேர் உயிரிழந்ததால் மொத்த எண்ணிக்கை 154 ஆக உயர்ந்துள்ளது.
Related Tags :
Source: Maalaimalar
murugan
Post navigation
லட்சுமி பாம் திரைப்படத்தின் கணினி மயமான உரிமை இவ்வளவு கோடியா?ஆசிரியர் பட விளம்பரம் எப்படி இருக்கும் தெரியுமா… மாளவிகா மோகனன்
Related Posts

அஜித் பட இயக்குநரின் முக்கிய அறிவிப்பு
murugan May 30, 2020 0 comment

லூசிபர் நடிகையை விமர்சித்த ரசிகர்கள்
murugan May 30, 2020 0 comment
