http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2605_2020__77144801616669.jpg

தமிழகத்தில் வெப்பச்சலனத்தால் 8 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

சென்னை: தமிழகத்தில் வெப்பச்சலனத்தால் 8 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, தென்காசி, கன்னியாகுமரி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, நெல்லை மாவட்டத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருத்தணியில் 106 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவாக வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.