https://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_2547924.jpg

சத்தீஷ்கர் மாஜி முதல்வர் அஜித் ஜோகி காலமானார்

1

ராய்பூர் : மருத்துவமனையில் கவலைக்கிடமாக இருந்த சத்தீஷ்கர் முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி இன்று காலமானார்.

மத்திய பிரதேசத்தில் இருந்து பிரிக்கப்பட்டு, 2000ல், தனி மாநிலமாக சத்தீஸ்கர் உதயமானபோது, அம்மாநில முதல்வராக பதவி ஏற்றவர் அஜித் ஜோகி, 74. கடந்த, 9ம் தேதி, அஜித் ஜோகிக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

https://img.dinamalar.com/data/gallery/gallerye_192428237_2547924.jpg

செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு மூளையை செயல்பட வைக்க, 'ஆடியோ தெரபி' சிகிச்சை துவங்கப்பட்டு வந்தது.கோமா நிலையில் இருந்த அஜித் ஜோகி இன்று காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்
Click here to join
Telegram Channel for FREE