https://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_2547916.jpg

மின்சார சட்ட திருத்தம் பிரதமருக்கு கடிதம்

6

சென்னை : 'மின்சார சட்டத் திருத்தத்தை திரும்ப பெற வேண்டும்' என, பிரதமர் மோடிக்கு, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அவரது கடிதம்:மாநில மின்சார ஒழுங்கு முறை ஆணையங்கள், மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் வருவது. ஆணைய தலைவர், உறுப்பினர்களை கூட, மத்திய குழு தேர்வு செய்வது; ஆணையத்தில் உறுப்பினரோ, தலைவரோ இல்லாமல் இருந்தால், அதன் பணியை, வேறொரு மாநிலத்தின் ஆணையம் கவனிக்க அதிகாரம்.

மேலும், மின் கொள்முதல், மின் விற்பனை உள்ளிட்ட, அனைத்து ஒப்பந்தங்கள் தொடர்பான தாவாக்களை, இனிமேல், மத்திய மின் ஒப்பந்த அமலாக்க ஆணையம் மட்டுமே, தீர்வு காணும் என்பதும், மாநிலங்களின் உரிமைகளை பறிக்கும் விஷயங்கள்.மின் ஒப்பந்த அமலாக்க ஆணையத்தில், மாநிலங்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லை. எனவே, மாநிலங்கள் சட்டமியற்றும் அதிகாரத்தை பறிக்கும், புதிய மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும். விவசாயிகளுக்கு வழங்கப்படும், இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் திட்டத்தையும் கைவிட வேண்டும்.இவ்வாறு, கடிதத்தில் ஸ்டாலின் கூறியுள்ளார்.

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்
Click here to join
Telegram Channel for FREE