https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/29/original/EZKiOB7U4AABGwE.jpg

நாடு முழுவதும் ஊரடங்கு மேலும் 15 நாள்கள் நீட்டிக்கப்படலாம்: கோவா முதல்வர்

by

பொது முடக்கம் மேலும் 15 நாள்கள் நீட்டிக்கப்படலாம் என கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் நான்காம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில், நாளை மறுநாள்(மே 31) பொது முடக்கம் முடிவடைய உள்ள நிலையில், ஐந்தாம் கட்டமாக ஊரடங்கை நீட்டிப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். 

இதற்கிடையே இன்று செய்தியாளர்களிடம் பேசிய கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், 'மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் நான் தொலைபேசியில் பேசினேன். மேலும் இரு வாரங்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று கூறினேன்.

பல்வேறு தரப்பினரின் கோரிக்கைக்கு ஏற்ப, நாடு முழுவதும் மேலும் 15 நாள்களுக்கு பொது முடக்கம் நீட்டிக்கப்படலாம். எவ்வாறாயினும், சில தளர்வுகள் இருக்க வேண்டும் என்பதும் எங்கள் கோரிக்கை. உணவகங்களை 50 ஊழியர்களுடன் செயல்பட அனுமதிக்க வேண்டும். உடற்பயிற்சிக் கூடங்கள் மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்று பலர் விரும்புகிறார்கள்' என்று தெரிவித்தார்.