https://s3.amazonaws.com/adaderanatamil/1590739658-Cerfew-2.jpg

ஊரடங்கு உத்தரவை மீறிய 9067 பேருக்கு தண்டனை விதிப்பு

மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இன்று (28) அதிகாலை 4.00 மணி வரையிலான காலப்பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் 66,662 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த காலப்பகுதியில் 18,778 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

நேற்று (28) இரவு 10.00 மணி முதல் இன்று அதிகாலை 4.00 மணி வரையிலான நிறைவடைந்த 6 மணித்தியாலங்களில் 143 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 35 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை, மார்ச் மாதம் 18 ஆம் திகதி தொடக்கம் இன்று வரையிலான காலப்பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறிய 22,591 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர்களில் 9067 பேருக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.