https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/29/original/modi_amit_shah.jpg

பொது முடக்கம் நீட்டிப்பு? - அமித் ஷாவுடன் பிரதமர் மோடி ஆலோசனை

by

பொது முடக்கம் முடிவடைய உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சருடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

நாடு முழுவதும் மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில், நாளை மறுநாள்(மே 31) பொது முடக்கம் முடிவடைய உள்ள நிலையில் ஐந்தாம் கட்டமாக ஊரடங்கை நீடிப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனையில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது. 

முன்னதாக, தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக இன்று காலை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.