https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/29/original/namakkal_plorry.jpg

நாமக்கல் அருகே பெயிண்ட் கேன்கள் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து: ஒட்டுநர்-கிளீனர் காயம்

by

ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே பெயிண்ட் கேன்கள் ஏற்றிச் சென்ற லாரி சாலை ஓரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரி ஒட்டுநர்-கிளீனர் காயமடைந்தனர். பெயின்ட் கேன்கள் சாலையில் உடைந்து ஒடியதால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

சேலத்திலிருந்து பெயிண்ட் கேன்களை ஏற்றிக்கொண்டு நாமக்கல் நோக்கி மினி லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்த லாரி சேலத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் ஒட்டிச்சென்றார். லாரியில் கிளீனர் ஜெய் என்பவரும் இருந்தார். லாரி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி அளவில் புதுச்சத்திரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது டயர் பஞ்சராகி லாரி ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் மற்றும் கிளீனர் ஆகிய இருவருக்கும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் இருவரும் நாமக்கல் மருத்துவமனை சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். 

https://images.dinamani.com/uploads/user/ckeditor_images/article/2020/5/29/namakkal_plorry1.jpg

மேலும் லாரி கவிழ்ந்தத்தில் அதிலிருந்த பெயிண்ட் கேன்கள் உடைந்து சாலையில் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்திருந்த புதுச்சத்திரம் காவல்துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.