சமூக ஊடகங்ளைக் கட்டுப்படுத்தும் சட்டத்தில் கையெழுத்திட்டார் டிரம்பு!
by கனிசமூக ஊடக இணையதளங்களுக்கு இருக்கும் சில சட்டப்பூர்வ பாதுகாப்புகளை நீக்க வகை செய்யும் செயலாக்க ஆணையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
பேஸ்புக், டுவிட்டர், உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது தளங்களில் பதியப்படும் உள்ளடக்கங்களை மேற்பார்வை செய்யும் விதத்திற்காக அவற்றின் மீது சட்டரீதியிலான நடவடிக்கையை அரசு எடுப்பதற்கு இது வழிவகை செய்கிறது.
அதேசமயம் இந்த செயலாக்க ஆணை சட்டரீதியிலான சவால்களை எதிர்கொள்ளும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சமூக ஊடக இணையத்தளங்களுக்கான பாதுகாப்புகள் குறித்த தற்போதைய சட்டரீதியிலான புரிதலை மாற்றும் பணியில் அமெரிக்க நாடாளுமன்றம் அல்லது நீதி அமைப்புகள் ஈடுபட வேண்டும் என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.
அண்மையில் டொனால் டிரம்ப் கீச்சகத்தில் பதிவிட்ட இரு பதிவுகளை கீச்சக நிர்வாகத்தினர் நீக்கியிருந்தனர். இதற்கு பதிலடியாக இந்த நடவடிக்கையை டிரம்ம் மேற்கொண்டுள்ளார்.