இந்தியர்களை அழைத்துச் செல்ல கட்டுநாயக்க வந்த விசேட விமானம்

by

கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக இந்தியாவுக்கு திரும்பி செல்ல முடியாது இலங்கையில் தங்கியிருந்த 170 இந்தியர்களை மீண்டும் இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல இந்திய விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானம் ஒன்று இன்று மும்பாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளது.

ஏ.ஐ.275 என்ற இந்த இந்திய விமானம் பயணிகள் எவரும் இன்றி இன்று காலை 10.45 அளவில் இந்தியாவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளது.

இந்த விமானத்தில் வர்த்தக வகுப்பில் 12 ஆசனங்களும், பொருளாதார வகுப்பில் 161 ஆசனங்களும் குழந்தைகளுக்கான 3 ஆசனங்களும் அடங்கியுள்ளனன.

இலங்கையில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டுள்ள இந்தியர்கள் கொரோனா வைரஸ் பரவுவதற்கு முன்னர் இலங்கைக்கு வந்திருந்தவர்கள்.

இந்தியாவில் இருந்து வந்திருந்த குறித்த விமானம் பயணிகளை ஏற்றிக்கொண்டு இன்று மதியம் 12. 10 அளவில் கட்டுநாயக்கவில் இருந்து மும்பாய் நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளது.