யுவன் சங்கர் ராஜா மதம் மாறியது ஏன்? மனைவி விளக்கம் – மின்முரசு
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மதம் மாறியது ஏன் என்ற கேள்விக்கு அவரது மனைவி ஷாஃப்ரூன் நிஷா பதில் அளித்து இருக்கிறார்.
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன்ஷங்கர் ராஜா இஸ்லாம் மதத்திற்கு மாறி 2015ஆம் ஆண்டு ஷாஃப்ரூன் நிஷா என்ற இஸ்லாம் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் யுவனின் மனைவி ஷாஃப்ரூன் நிஷா தனது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார். ரசிகர்களின் பெரும்பாலான கேள்விகள் யுவனை ஏன் இஸ்லாம் மதத்திற்கு மாற்றினீர்கள் என்றும், கடவுள் பக்தி மிகுந்த இளையராஜாவின் மகனை மதமாற்றிவிட்டீர்கள் என்றும், நீங்கள் ஏன் இந்துவாக மாறியிருக்க கூடாது என்ற ரீதியில் இருந்தன.
இந்த கேள்விகளுக்கு ஷாஃப்ரூன் நிஷா பொறுமையாக பதிலளித்தார். யுவன் திருமணத்திற்கு முன்னரே இஸ்லாம் மதத்தை தேர்வு செய்துவிட்டார் என்றும் இஸ்லாமை அவர் பின்பற்ற தொடங்கிய பின்னர் தான் எனக்கு அவரைத் தெரியும் என்றும், அவருடைய மிகப்பெரிய கேள்விகளுக்கான விடைகள் அவருக்கு குரானில் கிடைத்திருக்கலாம், அதனால் அவர் இஸ்லாம் மதத்திற்கு மாறியிருக்கலாம் என்றும் பதிலளித்தார்.
Related Tags :
Source: Malai Malar
murugan
Post navigation
மேற்கு வங்காளத்தில் அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்படும்: மம்தா பானர்ஜி அறிவிப்புலட்சுமி பாம் திரைப்படத்தின் கணினி மயமான உரிமை இவ்வளவு கோடியா?
Related Posts
நான் செய்யும் சேவைகள் எனது குழந்தைகளை காக்கும்- ராகவா லாரன்ஸ்
murugan May 30, 2020 0 comment
கருப்பினத்தவர் மரணம்; தீவிரமடையும் ஆர்ப்பாட்டங்கள் – என்ன நடக்கிறது அமெரிக்காவில்?
Nila Raghuraman May 30, 2020 0 comment