இவர்கள் எல்லாம் தொடர் வண்டி பயணத்தை தவிருங்கள்:தொடர்வண்டித் துறை வாரிய சேர்மன் வேண்டுகோள் – மின்முரசு
ஒருவேளை நோய் அறிகுறி உள்ளவர்கள் பயணம் செய்ய வாய்ப்புள்ளதால் கர்ப்பிணி போன்றோர்கள் ரெயில்களில் பயணம் செய்ய வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்கள் திரும்ப சிறப்பு ரெயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதேபோல் பொதுமக்கள் பயன்பெறும் வகையிலும் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
ரெயில் நிலையங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், நோய் தொற்று இருப்பவர்கள் பயணம் செய்யக்கூடாது. பயணிகளுக்கு தெர்மல் ஸ்கிரீனிங் பரிசோதனை செய்யப்படும் என பல்வேறு வழிகாட்டு நடைமுறைகளை ரெயில்வே வாரியம் வெளியிட்டுள்ளது. தற்போது கொரோனா வைரஸ் பாசிட்டிவ் எந்தவித அறிகுறியும் இல்லாமல் உறுதிப்படுத்தப்படுகிறது.
இதனால் ஒரு சில பயணிகள் சொந்த ஊருக்கு திரும்பிய பின் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவருடன் ரெயிலில் பயணம் செய்தவர்களுக்கும் நோய் தொற்றும் அபாயம் உள்ளது.
இதனால் கர்ப்பிணி பெண்கள், 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள், 65 வயதிற்கு மேற்பட்டோர் பெரும்பாலும் ரெயில் பயணங்களை தவிர்க்கவும். கட்டாயமாக பயணம் செய்தே ஆக வேண்டும் என்ற சூழ்நிலை இருந்தால் மட்டுமே பயணம் செய்யலாம் என ரெயில்வே வாரியம் சேர்மன் வினோத் குமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
அத்துடன் 3840 ரெயில்கள் இயக்கப்பட்டதில் நான்கு ரெயில்கள் மட்டுமே சென்றடைய இருந்த இடத்தை அடைவதற்கு 72 மணி நேரத்திற்கு மேல் எடுத்துள்ளது என்றார்.
Related Tags :
Source: Maalaimalar
murugan
Post navigation
உலக கோப்பை குறித்து ஜூன் 10-ந்தேதி முடிவு: ஐசிசி முடிவை தள்ளி வைத்ததுமேற்கு வங்காளத்தில் அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்படும்: மம்தா பானர்ஜி அறிவிப்பு
Related Posts
சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்- முதலமைச்சர் உத்தரவு
murugan May 30, 2020 0 comment
சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்- முதலமைச்சர் உத்தரவு
murugan May 30, 2020May 30, 2020 0 comment