
விஜய்யுடன் ஒரு வரலாற்றுப் படம்: மனம் திறந்த சசிகுமார்!
by DINசுப்ரமணியபுரம், ஈசன் படங்களை இயக்கிய இயக்குநர் சசிகுமார், விஜய்யுடன் இணைந்து வரலாற்றுப் படம் ஒன்றை இயக்குவது குறித்து பேசியுள்ளார்.
ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:
ஒரு வரலாற்றுப் படத்தை எடுக்க விரும்பினேன். இந்தக் கதையை விஜய்யிடமும் சொன்னேன். அவருக்கும் கதைப் பிடித்திருந்ததால் நடிக்கத் தயாராக இருந்தார். ஆனால் சில காரணங்களால் படத்தை எடுக்க முடியாமல் போனது. படத்தின் பட்ஜெட்டும் அதிகமாக இருந்தது. வருங்காலத்தில் விஜய்யுடன் இணைந்து நிச்சயம் ஒரு வரலாற்றுப் படத்தை இயக்குவேன் என்று கூறியுள்ளார்.
சசிகுமார் அடுத்ததாக முந்தானை முடிச்சு ரீமேக்கில் நடிக்கவுள்ளார். ஏ.வி.எம். தயாரிப்பில் கே. பாக்யராஜ் இயக்கி நடித்த சூப்பர் ஹிட் படம் - முந்தானை முடிச்சு. 1983-ல் வெளியானது. சசிகுமார் நடிக்கும் படத்துக்கு கே. பாக்யராஜ் திரைக்கதை எழுத ஜே.எஸ்.பி. சதீஷ் இப்படத்தைத் தயாரிக்கிறார்.