ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீட்டு சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி
by DINஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீட்டு சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார்.
திருவில்லிபுத்தூர் அருகே உள்ள ஏ.ராமலிங்காபுரம் மேலத்தெருவை சேர்ந்த எல்லம்மாள் ( 78) மூதாட்டியான இவர் அந்த பகுதியில் உள்ள பழைய காரை வீட்டில் தனியாக வசித்து வருகிறார்
இன்று காலை 6 மணி அளவில் வீட்டு காம்பவுண்ட் சுவரை ஒட்டியுள்ள பாத்ரூமிற்கு சென்று விட்டு தண்ணீர் ஊற்றும் போது வீட்டின் பழைய சுவர் வீடு இடிந்து விழுந்தது. இதில் எல்லம்மாள் கட்டிட இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக இறந்தார்
இது குறித்து தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு தீயணைப்புத்துறை அதிகாரிகள் குருசாமி மற்றும் அந்தோணி ஆகியோர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருந்த மூதாட்டி செல்லம்மாளின் உடலை மீட்டனர்.
வன்னியம்பட்டி காவலர்கள் இறந்த எல்லம்மாள் உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர்.