கரோனாவுக்காக மூடப்பட்ட ஆரணி காவல்நிலையம் மீண்டும் செயல்படத் தொடங்கியது
by DINகரோனாவுக்காக மூடப்பட்ட ஆரணி காவல்நிலையம் வெள்ளிக்கிழமை கணபதி ஹோமத்துடன் பூஜைகளுடன் செய்யப்பட்டு செயல்படத் தொடங்கியது.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியத்தில் அமைந்துள்ள ஆரணி காவல்நிலையத்தில் கடந்த 7ஆம் தேதி தலைமை காவலர் ஒருவருக்கு ஒரு உறுதியான நிலையை அடுத்து காவல் நிலையம் கிருமி நாசினி தெளித்து பூட்டி சீல் வைக்கப்பட்டது.
இந்த நிலையில் 21 நாட்கள் கழித்து மீண்டும் ஆரணி காவல் நிலையம் வெள்ளிக்கிழமை காலை கணபதி ஹோமத்துடன் பூஜைகள் செய்யப்பட்டு செயல்படத் தொடங்கியது.
வியாழக்கிழமை ஒவ்வொரு அறையும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் பொதுமக்கள் அச்சமின்றி காவல் நிலையத்திற்கு வர வெளியே கைகழுவதற்கு சோப்புகள் வைக்கப்பட்டுள்ளது என்று காவல்துறை தெரிவித்தனர்