தமிழிலும் வெளிவரும் துல்கரின் குரூப்
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்துக்கு பிறகு தமிழில் வரவிருக்கும் துல்கர் சல்மான் படம், குரூப். இதை அவரே சொந்தமாக தயாரிக்கிறார். அதிக பட்ஜெட்டில் தயாராகும் துல்கர் சல்மான் படம் இது. திட்டமிட்டபடி கடந்த வாரம் வெளியாகி இருக்க வேண்டிய படம், கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளிவைக்கப்பட்டு இருக்கிறது. துல்கரின் முதல் படத்தை இயக்கிய நாத் ராஜேந்திரன் இயக்கியுள்ளார். 35 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி இருக்கிறது. துல்கருடன் ஷோபிதா துலிப்பாலா, இந்திரஜித் சுகுமாரன், சன்னிவெய்ன், ஷைன் டாம் சாக்கோ உள்பட பலர் நடித்துள்ளனர்.