பிரான்சில் மது அருந்தகங்கள், உணவகங்கள் திறக்க அனுமதி - பிரதமர்

by
https://1.bp.blogspot.com/-BUvehYpRNyM/XtD4YtfoKzI/AAAAAAAAQIE/kQhTOVsxWYIkUuEc4FnoiYrYbmyTOqgbQCK4BGAsYHg/d/Screenshot_2020-05-29-12-55-45-06.png

மது அருந்தகங்கள், உணவகங்கள்  மீதான சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு திறக்கப்படும் என பிரஞ்சுப் பிரதமர் எடுவார்ட் பிவிப் கூறியுள்ளார்.

இவை பிரஞ்சு மக்களின் வாழ்க்கையின் முக்கிய அம்சங்கள். கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் வராத நிலையில் 
மது அருந்தகங்கள், உணவகங்கள் மொட்டைமாடியில் செயற்பட அனுமதி அளிக்கப்படும் என்றார். 

பரிமாறுவோர் கட்டாயமாக சுவாசக் கவசங்கள் அணிய வேண்டும். ஒரு மேசையில் 10க்கும் அதிகமானோர் அமரக்கூடாது. பாதுகாப்பு இடைவெளியை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டு எனத் தெரிவித்துள்ளார்.