கொரோனா நோயாளிகள் 2500 ஐ தாண்டினால் சிக்கல் - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்
by Steephen, Mayuriவெளிநாடுகளில் இருந்து இலங்கையர்களை அழைத்து வரும் செயற்பாடுகளில் சிக்கல் இருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே கடற்படையினர் மத்தியில் கொரோனா வைரஸ் பரவி வருவதற்கு மேலதிகமாக வெளிநாடுகளில் இருந்து வருவோரால் மேலும் கொரோனா நோயாளிகள் உருவாகியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதானிகளில் ஒருவரான மருத்துவர் நவிந்த சொய்சா கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
விசேடமாக குவைத்தில் இருந்து வந்துள்ள பெரும்பாலான இலங்கையர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.
இவர்கள் இலங்கைக்கு வந்த தினத்தில் இருந்து 10வது தினத்திலும் 14வது தினத்திலும் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும்.
அத்துடன் 2 ஆயிரத்து 500 முதல் 3 ஆயிரம் கொரோனா நோயாளிகள் இருந்தால் சிகிச்சையளிப்பதில் சிக்கல் ஏற்படும் எனவும் நவீந்த சொய்சா குறிப்பிட்டுள்ளார்.