
மேலும் 4 கடற்படை வீரர்கள் பூரண குணம்
மேலும் 4 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறி உள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, இதுவரையில் 361 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறி உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 13 பேர் நேற்று பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி தற்போது வரை 745 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரை 1530 பேர் இலங்கையில் கொரோனா நோயாளிகளாக அடையாளங் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 775 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.