https://s3.amazonaws.com/adaderanatamil/1590730842-vavunirya-raid-2.jpg

வவுனியாவில் பொது சுகாதார பரிசோதகர்கள் அதிரடி நடவடிக்கை : சிக்கிய உணவகங்கள்

வவுனியா நகரப்பகுதியில் பொது சுகாதார பரிசோதகர்கள் நேற்றையதினம் (28) மாலை 6.30 மணி தொடக்கம் 7.30 மணிவரையிலான காலப்பகுதியில் உணவகங்கள், மதுபானசாலைகள் மீது திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

கோவிட் -19 வைரஸ் தாக்கம் காரணமாக பல்வேறு நிபந்தனைகள் அடிப்படையில் உணவகங்கள் , வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு வவுனியா பொது சுகாதார பரிசோதகர்கள் இனக்கம் தெரிவித்திருந்தனர்.

இந் நிலையில் யூட் பிரீஸ் (சுகாதார வைத்திய அதிகாரி) , பொது சுகாதார பரிசோதகர்களான வோல்டயன் , எர்சன் றோய் மற்றும் பொலிஸார் அடங்கிய குழுவினர் நேற்று மாலை வவுனியா நகரப்பகுதிகளில் உள்ள உணவகங்கள் , மதுபானசாலைகளுக்கு திடிர் விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

இதன் போது உணவகங்களுக்கு வருகை தருகின்ற வாடிக்கையாளர் கை சுத்தம் செய்வதில்லை , கூட்டாக இருந்து உணவருந்துவது , மருத்துவ சான்றிதழ் இன்றி பணியாளர்கள் காணப்பட்டமை , காலவதியான உணவுப்பொருட்கள் , முகக்கவசம் சீராக அணியாமை போன்ற பல்வேறு குற்றச்செயல்களை பார்வையிட்ட அக்குழுவினர் குறித்த உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்குறிய நடவடிக்கையினை முன்னெடுத்து வருவதுடன் சில உணவகங்களுக்கு எச்சரிக்கையும் வழங்கியுள்ளனர்.

-வவுனியா தீபன்-