இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து ஜூன் 17-ந்தேதி தொடக்கம் – மின்முரசு
கொரோனா வைரஸ தொற்று காரணமாக நிறுத்தப்பட்ட இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து ஜூன் 17-ந்தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு சர்வதேச விளையாட்டு போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டும், ரத்து செய்யப்பட்டும் உள்ளன.
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி மற்றும் ஐரோப்பிய கால்பந்து ஆகியவை அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ரத்து செய்யப்பட்டது.
கால்பந்து போட்டிகளில் கிளப் போட்டி பிரசித்தி பெற்றது. ஐரோப்பா கண்டங்களில் நடைபெறும் லீக் போட்டிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கும். கொரோனா தொற்று காரணமாக கால்பந்து லீக் போட்டிகள் அனைத்தும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஜெர்மனியில் கால்பந்து லீக் போட்டி தொடங்கியது. ரசிகர்கள் இல்லாமல் இந்த போட்டி பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து போட்டி மீண்டும் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து போட்டியை அடுத்த மாதம் (ஜூன்) 17-ந்தேதி மீண்டும் தொடங்குவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அன்று நடைபெறும் ஆட்டத்தில் ஆஸ்ட்டர்வில்லா – செக் பீல்டன் யுனைடெட் மற்றும் மான்செஸ்டர் சிட்டி – ஆர்சனல் அணிகள் மோதுகின்றன. ரசிகர்கள் இன்றி இந்த போட்டி நடத்தப்படும்.
இந்த சீசனை முழுமையாக நடத்தி முடிக்க பிரிமீயர் லீக் கிளப் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
இங்கிலாந்தில் உள்ளூர் கிரிக்கெட் போட்டியை தொடங்குவதில் மேலும் தாமதம் செய்யப்பட்டுள்ளது.
Related Tags :
Source: Maalaimalar
Ilayaraja
Post navigation
கோயம்பேடு உணவு தானிய சந்தையை தற்போது திறக்க வாய்ப்பில்லை- சிஎம்டிஏமீரா மிதுனுக்கு திருமணமா… மிகுதியாகப் பகிரப்படும் காணொளி
Related Posts

நான் செய்யும் சேவைகள் எனது குழந்தைகளை காக்கும்- ராகவா லாரன்ஸ்
murugan May 30, 2020 0 comment

கருப்பினத்தவர் மரணம்; தீவிரமடையும் ஆர்ப்பாட்டங்கள் – என்ன நடக்கிறது அமெரிக்காவில்?
Nila Raghuraman May 30, 2020 0 comment
