http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2605_2020__412883937358857.jpg

கொரோனாவால் சீர்குலைந்த வாழ்க்கை சூழல்..:அரசு ஆவணம் இல்லாததால் நிவாரணம் கிடைக்கவில்லை: வேதனையில் பழங்குடியின மக்கள்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் ரேஷன் அட்டை உள்ளிட்ட அரசு ஆவணங்கள் இல்லாததால் அரசு அறிவிக்கும் நிவாரணங்களை பெற முடியாமல் பழங்குடியின மக்கள் வேதனையில் தவிக்கின்றனர். வந்தவாசி அருகே பொன்னூர் கிராமத்தில் வாழும் இந்த இருளர் இன மக்களின் வாழ்வாதாரத்தை கொரோனா தாக்கம் முற்றிலும் சீர்குலைத்துள்ளது.

வருமானத்துக்கு வழியில்லாமல் தவிக்கும் இவர்களிடம் ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஜாதி சான்றிதழ் மற்றும் ஆதார் போன்ற அரசு ஆவணங்கள் இதுவும் இல்லை. இதனால் அரசு அறிவித்த ரூ.1000 நிதியுதவி மற்றும் இலவச ரேஷன் பொருட்களை கூட வந்த முடியாமல் ஒரு வேலை உணவுக்கே அவதிப்பட்டுவருகின்றனர்.

சிறப்பு முகாம் அமைத்து அரசு ஆவணம் இல்லாத குடும்பத்துக்கு குடும்ப அட்டை உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் கிடைக்க மாவட்ட நிர்வாகம் வழிவகை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பழங்குடியின மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.