தண்ணீர் அரசியல் பேசும் ரணசிங்கம்
விஜய் சேதுபதியுடன் ஐஸ்வர்யா ராஜேஷ், சமுத்திரக்கனி, வேல ராமமூர்த்தி, பவானி நடித்துள்ள படம், க/பெ ரணசிங்கம். இதை விருமாண்டி என்ற புதுமுகம் இயக்கியுள்ளார். அறம் படத்தை தயாரித்த கோட்டபாடி ராஜேஷ் தயாரித்துள்ளார். ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். இப்படம் தண்ணீர் அரசியல் குறித்து பேசுகிறது. குடிநீருக்கே தள்ளாடும் வறண்ட கிராமத்தில் நிலத்தடி நீர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து, அங்கு மினரல் வாட்டர் கம்பெனி நடத்த முயற்சி செய்யும் ஒரு கார்ப்பரேட் கம்பெனிக்கும், அதை தடுக்க முயற்சி ெசய்யும் ரணசிங்கத்துக்கும் இடையிலான மோதல்தான் படம்.
இதில் ரணசிங்கமாக விஜய் சேதுபதி, அவரது மனைவியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளனர். படப்பிடிப்புகள் அனைத்தும் ஏற்கனவே முடிந்துவிட்டது. தற்போது கொரோனா ஊரடங்கில் டப்பிங் பணிகளுக்கு தளர்வு கிடைத்திருப்பதால் மற்ற பணிகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளது. கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கின்றனர்.