குறுகிய காலம் மட்டுமே: சியோமி போன்களுக்கு அமேசானில் அட்டகாச தள்ளுபடி!
by Karthick Mஸ்மார்ட்போன்களில் இந்திய சந்தையை ஆக்கிரமித்து வரும் சியோமி நிறுவனத்தின் குறிப்பிட்ட மாடல் ஸ்மார்ட்போன்களுக்கு அமேசானில் அட்டகாச தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையை ஆக்கிரமித்த சியோமி
சீன நிறுவனமான சியோமி இந்திய ஸ்மார்ட்போன் சந்தையை ஆக்கிரமித்துள்ள பிராண்டுகளில் பிரதான ஒன்று. சியோமி இந்தியாவில் குறைந்த விலை ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. இந்திய சந்தையை ஆக்கிரமித்து வரும் சியோமி தனது ஸ்மார்ட்போன்களை அனைத்து விலை புள்ளிகளிலும் வெளியிட்டு வருகிறது.

அமேசான் இ-காமர்ஸ் தளம்
அதேபோல் அமேசான் இ-காமர்ஸ் தளம் மிகவும் நம்பகமான பிரபலமான தளமாகும். பொதுவாக எம்ஐ மாடல் போன் வெளியிட்ட உடன் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வருவது வழக்கம். அதேபோல் அமேசானில் சியோமி தங்களது ஸ்மார்ட்போன்களுக்கு பல்வேறு கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்குகிறது. இதில் வாடிக்கையாளர்கள் கேஷ்பேக் சலுகை, தள்ளுபடிகள் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்குகின்றன.

சும்மா பறந்து பறந்து விரட்டும்: வெட்டுக்கிளியை விரட்ட அட்டகாச திட்டம்!

Mi 10 5G ஸ்மார்ட்போன்
Mi 10 5G சியோமி ஸ்மார்ட்போனானது, 108 MP முதன்மை கேமராவுடன் குவாட் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த சாதனம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 865 SoC ஆல் இயக்கப்படுகிறது. அதோடு 30W வேகமான சார்ஜிங் தொழில்நுட்பத்தால் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு அமேசானில் ரூ.3,000 வரை தள்ளுபடி கிடைக்கிறது. அதோடு சிறந்த இஎம்ஐ கட்டண விருப்பங்களும் இதில் உள்ளது.

ரெட்மி நோட் 8 ப்ரோ
சியோமியின் பிரபலமான மாடல்களில் ஒன்றான ரெட்மி நோட் 8 ப்ரோ 64 எம்பி ஏஐ ரியர் குவாட் கேமரா அமைப்புடன் வருகிறது. ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி 90 டி செயலி மற்றும் 20 எம்பி செல்பி கேமரா ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த சாதனம் அமேசானில் ஆறு மாதங்களுக்கு நோ காஸ்ட் இஎம்ஐ சலுகையோடு கிடைக்கிறது.

எம்ஐ ஏ 3
இந்த ஸ்மார்ட்போனானது 48 எம்பி முதன்மை பின்புற கேமரா மற்றும் 32 எம்பி செல்பி கேமரா சென்சார் கொண்ட ஸ்மார்ட்போன் ஆகும். இந்த ஸ்மார்ட்போனில் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே மற்றும் 4,030 mAh பேட்டரியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனை அமேசான் மூலம் ஆறு மாத இஎம்ஐ விருப்பத்தில் வாங்கலாம்.

ரெட்மி கே 20 ப்ரோ
ரெட்மி கே 20 ப்ரோ ஸ்னாப்டிராகன் 855 SoC, பாப்-அப் செல்பி கேமரா சென்சார், டிரிபிள் ரியர் கேமரா அமைப்போடு கிடைக்கிறது. மேலும் இந்த போன் கேம்களுக்கு சிறந்த சலுகையாக கிடைக்கிறது. ரெட்மி கே 20 ப்ரோவை அமேசான் மூலம் 12 மாதங்கள் வரை நோகோஸ்ட் இஎம்ஐ கட்டண விருப்பத்தில் வாங்கலாம்.

ரெட்மி கே 20
ரெட்மி கே 20 பாப்-அப் செல்பி கேமரா சென்சார் மற்றும் பல்வேறு குறிப்பிடத்தக்க சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அமேசானில் கவர்ச்சிகரமான தள்ளுபடிகள் மற்றும் இஎம்ஐ விருப்பங்களில் கிடைக்கின்றன.

போகோ எஃப் 1
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமான ஸ்மார்ட்போன்களில் ஒன்றான போகோ எஃப் 1 ஸ்னாப்டிராகன் 854 SoC ஆல் இயக்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போன் வாங்கும்போது அமேசான் 10% வரை தள்ளுபடியை வழங்குகிறது.

ரெட்மி நோட் 9 ப்ரோ
ரெட்மி நோட் 9 ப்ரோ ஸ்னாப்டிராகன் 720 ஜி SoC உடன் 48MP குவாட் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 5,020 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 6.7 இன்ச் டிஸ்ப்ளே உள்ளது. 5020 mAh பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன் அடுத்த ஜூன் 2 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது. அமேசான் இந்த சாதனத்திற்கு அட்டகாச சலுகைகளை வழங்குகிறது.

WhatsApp பயனர்களே உஷார்! வாட்ஸ்அப்பில் பரவும் புதிய மோசடி - இதை மட்டும் செய்யாதீங்க!

ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ்
ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் என்பது ஸ்மார்ட்போன் நோட் 9 ப்ரோவுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்புறத்தில் 64 எம்.பி குவாட் கேமரா அமைப்பு, 32 எம்.பி இன் டிஸ்ப்ளே செல்பி கேமரா சென்சாரோடு வருகிறது. ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் ஆகியவற்றுடன் இந்த ஸ்மார்ட்போனின் மூன்றாவது விற்பனை அடுத்த வாரம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமேசான் இந்த ஸ்மார்ட்போனை கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்குகிறது.
Most Read Articles

89 வயதான யூடியூப் கேமர் பாட்டிக்கு கின்னஸ் விருது! எதற்கு தெரியுமா?

நம்ம வீடு பிரமாண்டம் தான்: 32 இன்ச் ஸ்மார்ட் டிவி ரூ.15,000-க்கு கீழ்: எது சிறந்தது தெரியுமா?

மலிவு விலைனா இதுதான்: ரூ.8,999 மட்டுமே., மூன்று கேமராவோடு அட்டகாச Samsung Galaxy M11, Galaxy M01!

லேட்டஸ்ட் டிரெண்ட்: டாப் 8 மொபைல்கள்., யோசிக்காம வாங்கலாம்- பட்ஜெட் முதல் ப்ரீமியம் வரை!

விவோ எக்ஸ்50, எக்ஸ்50 ப்ரோ, எக்ஸ்50 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்! விலை?

இன்று விற்பனைக்கு வருகிறது அட்டகாச சியோமி நோட் 9ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்.!

தமிழ்நாடு: வருமானம் இல்லாததால், ஆன்லைன் பக்கம் நகர்ந்த பாலியல் தொழிலாளர்கள்!

Xiaomi ரெட்மி 10X, 10X Pro மற்றும் 10X 4G ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்! விலை மற்றும் முழு விபரம்!

ஏசர் ஸ்விப்ட் 3நோட்புக் அறிமுகம்.! விலை இவ்வளவு தான்.!

4கே டிஸ்ப்ளே redmi X smart tv: விலைய கேட்டா இப்பவே வாங்கலாம் போல!

மனச திடப்படுத்திக்கோங்க: இந்த இடம்தான் ரொம்ப த்ரில்லிங்கா இருக்கும்., ACT Fibernet பயனர்களே!

விலை ரூ.9,500: 32-இன்ச் ஸ்மார்ட் டிவி அறிமுகம்.! சியோமி சரவெடி.!
Best Mobiles in India

சாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G
92,999

ரியல்மி 6 ப்ரோ
17,999

ரியல்மி X50 ப்ரோ 5G
39,999

ஒப்போ ரெனோ3 ப்ரோ
29,400

iQOO 3
38,990

சாம்சங் கேலக்ஸி A71
29,999

போகோ X2
16,999

சாம்சங் கேலக்ஸி A51
23,999

ஒப்போ F15
18,170

விவோ V17
21,900

ரெட்மி நோட் 9 ப்ரோ
14,999

ரியல்மி 6 ப்ரோ
17,999

சாம்சங் கேலக்ஸி S10 லைட்
42,099

போகோ X2
16,999

சாம்சங் கேலக்ஸி A51
23,999

ரியல்மி X2 ப்ரோ
29,495

விவோ S1 ப்ரோ
18,580

ஆப்பிள்ஐபோன் 11
64,900

ஒன்பிளஸ் 7T
34,980

ஆப்பிள்ஐபோன் XR
45,900

டெக்னா கமோன் 15 Premier
17,999

ஹானர் 30 ப்ரோ பிளஸ்
54,153

லேனோவோ A7
7,000

எல்ஜி Style3
13,999

சாம்சங் கேலக்ஸி A71 5G
38,999

சாம்சங் கேலக்ஸி A51 5G
29,999

டிசிஎல் 10L
20,599

ஹானர் 30 ப்ரோ
43,250

ஹானர் 30
32,440

ஹானர் பிளே 4T ப்ரோ
16,190