WhatsApp பயனர்களே உஷார்! வாட்ஸ்அப்பில் பரவும் புதிய மோசடி - இதை மட்டும் செய்யாதீங்க!
by Sharath Chandarவாட்ஸ்அப் உலகளவில் பல மில்லியன் பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதுவும், குறிப்பாக இந்த கோவிட் -19 தொற்றுநோய் தாக்குதல் மற்றும் ஊரடங்கு காரணமாக அதன் பயன்பாட்டு சுமார் 40% அதிகரித்துள்ளது. தற்பொழுது ஹேக்கர்களின் கைவரிசை வாட்ஸ்அப் பக்கமும் திரும்பியுள்ளது. பயனர்களே உஷாராக உங்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள இறுதி வரை படியுங்கள்.

வாட்ஸ்அப் வெரிஃபிகேஷன் கோடு மோசடி
வாட்ஸ்அப் பயன்பாட்டின் வளர்ச்சியைக் கண்காணிக்கும் WABetaInfo, தனது டிவிட்டர் பக்கத்தில் வாட்ஸ்அப் பயனர்களைக் குறிவைக்கும் ஒரு புதிய மோசடி பற்றி எச்சரித்துள்ளது. டிவிட்டர் பயனரான டாரியோ நவரோவின் கேள்விக்குப் பதிலளிக்கும் விதமாக "வாட்ஸ்அப் உங்கள் தரவு அல்லது வெரிஃபிகேஷன் கோடு குறியீடுகளை (verification code) ஒருபோதும் கேட்காது" என்று தெரிவித்துள்ளது. தற்பொழுது பரவி வரும் வெரிஃபிகேஷன் கோடு மோசடி பற்றி எச்சரித்துள்ளது.

மெசேஜ் மூலம் புதிய மோசடியில் ஹேக்கர்கள்
வாட்ஆப்பின் தொழில்நுட்ப குழு என்று கூறி ஒரு கணக்கிலிருந்து நவரோவுக்கு ஒரு வாட்ஸ்அப் செய்தி வந்துள்ளது. செய்தியில், ஹேக்கர் நவரோவிடம் தனது அடையாளத்தைச் சரிபார்க்கும்படி கேட்டிருக்கிறார், அதற்கு அவர் தனது வாட்ஸ்அப் கணக்குகளைப் பதிவு செய்யும் போது எஸ்எம்எஸ் வழியாக அனுப்பப்படும் ஆறு இலக்க சரிபார்ப்புக் குறியீட்டை வழங்கக் கூறி அந்த ஹேக்கர் வாட்ஸ்அப் அதிகாரி போல மெசேஜ் செய்துள்ளார்.

சும்மா பறந்து பறந்து விரட்டும்: வெட்டுக்கிளியை விரட்ட அட்டகாச திட்டம்!
சுவாரஸ்யமான விஷயம் இதுதான்!
சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், ஹேக்கர் வாட்ஸ்அப்பின் லோகோவை அவரின் கணக்கின் ப்ரொஃபைல் பிக்ச்சராக பயன்படுத்தியிருக்கிறார், உண்மை என்னவென்று தெரியாத பயனருக்கு, அவர்களுக்கு வரும் மெசேஜ் உண்மையில் நேரடியாக வாட்ஸ்அப் நிறுவனத்திலிருந்து வருகிறது என்று நம்புவதற்கு வழிவகுக்கும். முதலில், வாட்ஸ்அப் உங்களுக்கு அப்படி ஒரு மெசேஜை ஒருபோதும் அனுப்பப் போவதில்லை என்பதே உண்மை.

வாட்ஸ்அப் ஒருபோதும் இதை செய்யாது
WABetaInfo சுட்டிக்காட்டியுள்ளபடி, வாட்ஸ்அப் அதன் பயனர்களுக்கு அறிவிப்புகளை அனுப்பத் தனிப்பட்ட மெசேஜ்களை நேரடியாகப் பயனருக்கு ஒருபோதும் அனுப்பாது, அதிலும் குறிப்பாக நிச்சயமாக அவர்களின் கணக்குகளைச் சரிபார்க்கும்படி கேட்கவே கேட்காது என்று நிறுவனம் தெளிவாகக் கூறியுள்ளது. நிறுவனம் தனது தகவல்களை எப்பொழுதும் அதன் அதிகாரப்பூர்வ சமூக ஊடகம் வழியாகவே செய்திகளை வெளியிடுகின்றது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நம்ம வீடு பிரமாண்டம் தான்: 32 இன்ச் ஸ்மார்ட் டிவி ரூ.15,000-க்கு கீழ்: எது சிறந்தது தெரியுமா?

கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய பச்சை டிக் மார்க்
அப்படி ஒரு வேலை, ஒரு அரிதான சூழ்நிலையில், நிறுவனம் தனது பயனர்களுக்குச் செய்திகளை மெசேஜ் வடிவில் அனுப்ப முடிவு செய்தால், அந்த குறிப்பிட்ட மெசேஜ் ஒரு பச்சை டிக் மார்க் கொண்ட வாட்ஸ்அப் கணக்கிலிருந்து பயனருக்கு வரும். பச்சை டிக் மார்க், இந்த மெசேஜ் சரிபார்க்கப்பட்ட கணக்கிலிருந்து வருகிறது என்பதைக் குறிக்கிறது. அதேபோல், நிறுவனம் எப்போதும் பயனர்களின் வெரிஃபிகேஷன் கோடு விபரங்களைச் சரிபார்க்கச் சொல்லிக் கேட்காது.

வாட்ஸ்அப் வெரிஃபிகேஷன் கோடு பத்திரம்
வாட்ஸ்அப், அதன் சமூக வலைத்தள ஆதரவு பக்கத்தில், பயனர்கள் யாரும் தங்கள் வெரிஃபிகேஷன் கோடு விபரங்களை சரிபார்ப்புக்கு யாருடனும் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்று தெளிவாக்க எச்சரித்துள்ளது. அதேபோல், ஒரு பயனருக்கு புதிய வெரிஃபிகேஷன் கோடு விபரங்கள் வருகிறது என்றால் நிச்சயம் உங்கள் கணக்கை வேறு யாரோ ஒருவர் திறக்க போலியான அனுமதியை முயற்சிக்கிறார் என்று அர்த்தம்.

ஒருவேளை உங்களுக்கு வெரிஃபிகேஷன் கோடு வந்தால் என்ன அர்த்தம்?
உங்கள் கணக்கைப் பாதுகாப்பாக வைத்திருக்க, உங்கள் வெரிஃபிகேஷன் கோடு விபரங்களை, மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம். இந்த அறிவிப்பை நீங்கள் பெறும்போது, யாராவது உங்கள் தொலைப்பேசி எண்ணை உள்ளிட்டுப் பதிவுக் குறியீட்டைக் பெறக் கோரியுள்ளனர் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

இதை செய்தாலும் இந்த பிழை நிகழ வாய்ப்புள்ளது
அதேபோல், மற்றொரு சூழலில் பயனர் பதிவு செய்ய தங்கள் எண்ணை உள்ளிட முயற்சிக்கும் போது உங்கள் எண்ணைத் தவறாகத் தட்டச்சு செய்தாலும் இந்த பிழை நிகழ வாய்ப்புள்ளது. குறிப்பாக இது யாராவது உங்கள் கணக்கை அணுக முயற்சிக்கும் போது தான் நிகழ்கிறது என்று வாட்ஸ்அப் கூறியுள்ளது. யாரும் உங்களின் வெரிஃபிகேஷன் கோடு விபரங்களை கேட்டால், தயங்காமல் உடனடியாக அவர்களை பிளாக் செய்துவிடுங்கள்.

ஹூவாய் நிறுவனத்தின் தரமான ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.!

உங்கள் வாட்ஸ்அப் கணக்கு மோசடி செய்யப்பட்டிருந்தால் என்ன செய்வது?
உங்கள் தொலைப்பேசி எண்ணை வெரிஃபிகேஷன் செய்வதன் மூலம் உங்கள் வாட்ஸ்அப் கணக்கை நீங்கள் எளிமையாகத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். நீங்கள் அவ்வாறு செய்தவுடன், உங்கள் கணக்கைப் பயன்படுத்தும் ஹேக்கர் தானாகவே லாக் அவுட் செய்யப்படுவர்.
Most Read Articles

இரண்டு ரியல்மி ஸ்மார்ட்போன்களுக்கு புதிய அப்டேட்.! என்ன தெரியுமா?

போன்லாம் வேண்டாம்: whatsapp மூலம் சிலிண்டர் புக் செய்யலாம்., டிராக்கிங் வசதியும் இருக்கு!

தமிழக அரசு அதிரடி: இனி பேருந்துகளில் Paytm மூலம் டிக்கெட்., சில்லரை இல்லனு பேச்சுக்கே இடமில்ல!

Whatsapp இல் 50 நபர் வீடியோ கால் அழைப்பு செய்வது எப்படி? புதிய மெசஞ்சர் ரூம்ஸ் அம்சம்!

வருகிற 5 ஆம் தேதி அறிமுகம்: அட்டகாச அம்சங்களோடு ஒப்போ ரெனோ 4 மற்றும் ரெனோ 4 ப்ரோ!

வாட்ஸ்அப் செயலியில் பயனுள்ள வசதி அறிமுகம்.! என்ன தெரியுமா?

Huawei நோவா லைட் 3 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்! விலை என்ன?

சும்மா புகுந்து விளையாடலாம்: இனி whatsapp status-க்கு அந்த பிரச்சனை இல்லை!

சீன ஆப்களுக்கு இப்படியொரு நிலைமையா? ஆப்பு வைக்கும் ரிமூவ் சீனா ஆப்ஸ்.!

Whatsapp இல் 50 நபர் வீடியோ காலிங் அம்சத்திற்கான விருப்பம் அறிமுகம்! எப்படிப் பயன்படுத்துவது?

Nokia 43' இன்ச் ஸ்மார்ட் டிவி இந்தியாவில் அறிமுகம்! விலை என்ன தெரியுமா?

Whatsapp வெப் வெளியிடாத டார்க் தீம் அம்சத்தைப் பயன்படுத்துவது எப்படி?
Best Mobiles in India

சாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G
92,999

ரியல்மி 6 ப்ரோ
17,999

ரியல்மி X50 ப்ரோ 5G
39,999

ஒப்போ ரெனோ3 ப்ரோ
29,400

iQOO 3
38,990

சாம்சங் கேலக்ஸி A71
29,999

போகோ X2
16,999

சாம்சங் கேலக்ஸி A51
23,999

ஒப்போ F15
18,170

விவோ V17
21,900

ரெட்மி நோட் 9 ப்ரோ
14,999

ரியல்மி 6 ப்ரோ
17,999

சாம்சங் கேலக்ஸி S10 லைட்
42,099

போகோ X2
16,999

சாம்சங் கேலக்ஸி A51
23,999

ரியல்மி X2 ப்ரோ
29,495

விவோ S1 ப்ரோ
18,580

ஆப்பிள்ஐபோன் 11
64,900

ஒன்பிளஸ் 7T
34,980

ஆப்பிள்ஐபோன் XR
45,900

டெக்னா கமோன் 15 Premier
17,999

ஹானர் 30 ப்ரோ பிளஸ்
54,153

லேனோவோ A7
7,000

எல்ஜி Style3
13,999

சாம்சங் கேலக்ஸி A71 5G
38,999

சாம்சங் கேலக்ஸி A51 5G
29,999

டிசிஎல் 10L
20,599

ஹானர் 30 ப்ரோ
43,250

ஹானர் 30
32,440

ஹானர் பிளே 4T ப்ரோ
16,190