கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்தவுடன் தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தலை நடத்த தயார் நிலையில் இருக்க வேண்டும்
by Ajith, Jeyapradheebaகொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தவுடன் பொதுத் தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தயார் நிலைகளை தற்போதே மேற்கொள்ளவேண்டும் என்று பொதுஜன பெரமுன கோரியுள்ளது.
பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக இந்தக் கோரிக்கையை நேற்று கட்சியின் தலைமையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது விடுத்துள்ளார்.
கொரோனாவுக்கு மத்தியில் தேர்தலை நடத்துவதற்கு ஆணையம் தயாராக இல்லை.
எனினும் அதனை நடத்தவேண்டியது அணையத்தின் பொறுப்பு என்று அவர் வலியுறுத்தினார்
உலகில் அனைத்து மக்களும் இன்னும் சில ஆண்டுகள் கொரோனவுடன் வாழ வேண்டியிருக்கும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்,
எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து அன்றாட வாழ்க்கையைத் தொடர அவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
எவ்வாறாயினும், இலங்கையின் தேர்தல் ஆணையம் அதற்கு நேர்மாறாக செயல்படுகிறது,
அவர்கள் தங்கள் கடமையைத் தொடர விரும்பவில்லை என்று சானக குற்றம் சுமத்தினார்.
ஜூன் 20 அன்று தேர்தலை நடத்த ஆணைக்குழு உண்மையிலேயே விரும்பினால் விருப்பு எண்களை வழங்கி வாக்குச்சீட்டுகளைத் தயாரித்திருக்கலாம். எனினும் ஆணைக்குழு அதனை செய்யவில்லை.
இது தேர்தலை சரியான நேரத்தில் நடத்த தேர்தல் ஆணைக்குழு விரும்பவில்லை என்பதைக் குறிக்கிறது, என்றும் சானக சுட்டிக்காட்டியுள்ளார்.