பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு வந்தவர்கள் தனிமைப்படுத்தல் முகாம்களில்...!

by

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இலங்கைக்கு வர முடியாமல் பிரித்தானியாவில் சிக்கித்தவித்த 221 இலங்கையர்கள் சற்று முன்னர் இலங்கையில் வந்திறங்கியுள்ளனர்.

ஸ்ரீலங்கன் ஏயார் லைன்ஸிற்கு சொந்தமான யூஎல் -1504 சிறப்பு விசேட விமானம் மூலம் குறித்த 221 பேரும் இன்று நண்பகல் 12.25 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இலங்கைக்கு திரும்பிய இவர்கள் அனைவருக்கும் கிருமித் தொற்று நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

அவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு இராணுவத்தினர் அழைத்துச்செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.